Saturday, 12 March 2011

பிரபாவை போல் ஒரு சிறந்த கெரில்லா வீரன் கிடையாது -இந்தியா ஊடகவியளாலர்

கடந்த 30 வருடகாலத்தில் பிரபாகரன்தான் ஒரே ஒரு சிறந்த கெரில்லா தலைவர். அதைவிட சேகுவேராவிற்கு பின்னர் அவரைத்தான் சிறந்த உலகில் கெரில்லா தலைவராக என்னால் பார்க்க முடியும் என கூறியுள்ளார் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப்.

இந்திய ஊடகம் ஒன்றிற்கான செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தான் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றினை எழுத தனக்கு பிரபாகரன் அனுமதி தந்ததாகவும் ஆனால் கடைசிவரை நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் இன்று இராஜபக்‌ஷவின் தயவில்தான் வாழவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரபாகரனிற்கு பின்னர் தமிழர்களுக்கு தலைமைத்துவம் இல்லை. அப்படி இருந்தாலும் பிரபாகரன் போல் கிடைக்காது. தமிழ் மக்களை கடந்த 30 வருடமாக வழி நடத்தி வந்த தலைவர் திடீரென விட்டுவிட்டு சென்று விட்டார் எனவும் அதனால் தமிழர்கள் துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ள அனிதா பிரதாப் அதற்கு பிரபாகரனை மட்டும் குறை சொல்ல முடியாது பூகோள அரசியலே காரணம் என்கின்றார்.

சீனா, இந்தியா உதவி இருக்காவிட்டால் பிரபாகரனை தோற்கடித்திருக்க முடியாது எனவும் கூறியுள்ளார் அனிதா பிரதாப்.

No comments:

Post a Comment