
வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு தமிழே தெரியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாகினியில் உரை நிகழ்த்திய அவர், வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு தமிழே தெரியாது என்றும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஊர்களின் பெயர்கள் கூட அவர்களுக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு தான் தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் இருப்பதாக இலங்கை பிரதமர் கூறியிருந்தார்.
பின்னர் அதை மறுத்த அவர், அதை நானாக சொல்லவில்லை அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயா தான் அவ்வாறு கூறினார் என்றார். இலங்கை அரசின் இந்தக் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
No comments:
Post a Comment