Saturday, 25 June 2011

அலெக்ஸாவில் முன்னேற ஐந்து எளிய வழிகள்

அலெக்ஸா ரேங்க் மதிப்பீடு பற்றி ஏற்கனவே எனது அலெக்ஸா ஒரு அலசல் என்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இப்போது அதன் தொடர்ச்சியாக அலெக்ஸாவில் முன்னணி ரேங்க் பெற எனக்குத் தெரிந்த / நான் படித்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

- முதலில் உங்கள் தளத்தில் அலெக்ஸா ரேங்க் விட்ஜெட்டை நிறுவுங்கள். நீங்கள் பயன்படுத்தும் கணினியில் உங்கள் தளத்தை முகப்பு பக்கமாக செட் செய்யுங்கள். முடிந்தவரைக்கும் அலெக்ஸாவைப் பரப்புங்கள். அலெக்ஸாவின் பெருமைகளை எடுத்துச் சொல்லி உங்கள் நட்பினையும் சுற்றத்தையும் அலெக்ஸாவைப் பயன்படுத்தச் செய்யுங்கள். முடிந்தால் அலெக்ஸாவைப் பெருமைபடுத்தி பதிவொன்றை எழுதுங்கள். (இப்போது நான் செய்திருப்பதைப் போல...)

- வாசகர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்களைப் பற்றி எழுதுங்கள். குறிப்பாக பதிவுலகம், blogger tips போன்றவற்றைப் பற்றி எழுதும்போது நல்ல பயன் கிடைக்கும். வாசகர்களுக்கு புதிர் போட்டி, போட்டோ கமெண்ட்ஸ் போட்டி போன்றவற்றை நடத்தலாம். எதைப் பற்றி எழுதினாலும் தலைப்பை வசீகரமாக தேர்வு செய்யவேண்டும். (அதற்காக அஜால் குஜால்த்தனமாக தலைப்பு வைப்பது, தலைப்பில் 18+ என்று சேர்ப்பது எல்லாம் அவசியம் இல்லை. கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் உள்ள வித்தியாசம் அறிந்து செயல்படுங்கள்).

- பதிவுலகத்தை பொறுத்தவரையில் திரட்டிகளின் செயல்பாடு அதிமுக்கியமானது. உங்களுடைய பதிவுகளை தகுந்த குறிச்சொற்களுடன் முக்கிய திரட்டிகளில் இணையுங்கள். ஆர்குட்,பேஸ்புக்டுவிட்டர் போன்ற சமூக வலையமைப்பு தளங்களிலும் உங்கள் இடுகையின் இணைப்பை பகிருங்கள். மற்றவர்களின் இடுகையின் பின்னூட்டம் போடும்போது கூட உங்கள் இடுகையின் இணைப்பையும் சொருகிவிடலாம்.

போனஸ்:
உங்கள் பார்வைக்காக திரட்டிகளின் அலெக்ஸா ரேங்க் (As onJanuary 182011)
இன்ட்லி  8,200 (ஆங்கில தளத்தையும் சேர்த்து)
தமிழ் 10  31,935
ஈ-தமிழ்  44,828
உலவு  49,580
சங்கமம்  1,33,820
திரட்டி  1,34,808

- வாசகர்கள் உங்களுடைய வலைப்பூவை விட்டு வெளியேறுவதை தவிர்த்தல் வேண்டும். ஒருவேளை, உங்களுடைய தளத்தில் ஏதேனும் மூன்றாம் தரப்பு இணைப்பை வைத்திருந்தால் வாசகர்கள் உங்கள் வலைப்பூவை விட்டு வெளியேறக் கூடும். எனவே உங்கள் வலைப்பூவில் எந்த இணைப்பை கிளிக்கினாலும் அது புது டேபில் திறக்கும் வகையில் வடிவமைக்கலாம். இதுப்பற்றி வந்தேமாதரத்தின் இந்த இடுகையில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

- விட்ஜெட்ஸ் மிக முக்கியம். உங்களுடைய பிரபல இடுகைகளை முன்னிலைப் படுத்தும் popular posts widget, உங்களுடைய ஒரு இடுகையின் சம்பந்தப்பட்ட மற்ற இடுகைகளை காட்டும் related posts widget போன்றவற்றை தவறாமல் பயன்படுத்தவும். உங்கள் வலைப்பூவிற்கு வாசகர்கள் எளிதில் சந்தாதாரர் ஆகும் வகையில்followers widget, email subscription box போன்றவற்றை முன்னிலைப் படுத்துங்கள். உங்களை பின்தொடரும் வாசகர்களுக்கு நியூஸ்லெட்டர் மூலமாக புதிய இடுகையைப் பற்றி தகவல் தெரிவிக்கலாம். நியூஸ்லெட்டர் அனுப்புவது குறித்து இன்னும் விவரமாக தெரிந்துக்கொள்ள இந்த இணைப்பை பார்க்கவும்.

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றிப் பாருங்கள் பத்திலிருந்து பதினைந்து நாட்களுக்குள் உங்களுடைய தளத்தின் அலெக்ஸா ரேங்க் முன்னேறி இருக்கும். இப்போதைக்கு உங்களுடைய தளத்தின் அலெக்ஸா ரேங்க் என்ன என்பதை பின்னூட்டத்தின் மூலமாக பகிர்ந்துக்கொள்ளலாமே...

நன்றி:

No comments:

Post a Comment