Saturday 9 June 2012

ரீசைக்கிள் பின்னிலிருந்து அழித்த கோப்புகளை மீட்டெடுக்க...


ஏதாவது ஒரு நினைவில் அல்லது தேவையில்லையென நினைத்து ஒரு கோப்பை நாம் நம் கணினியிலிருந்து  அழித்திருப்போம்.. அது மீண்டும் தேவைப்படும்போது அழித்த கோப்புகளை மீட்பதில் அதிகம் சிரமம் ஏற்படும்.


Recycle bin -ல் இருந்தால் பரவாயில்லை. மீண்டும் அதை மீட்டுவிடலாம். ஆனால் அதிலிருந்தே தேவையில்லையென அழித்திருந்தால் அந்தக் கோப்பை எப்படி மீட்பது? இதோ அதற்கான மென்பொருள்: Recuva]

இது அழித்தக் கோப்புகளை மீட்டுத்தரும் மென்பொருள். உங்கள் கணினியில் தெரியாத் தனமாகவோ, அல்லது தெரிந்தோ அவசர அவசரமாக அழித்தக் கோப்புகளை கண்டுபிடித்து மீட்டெடுக்கும் மகராசன்தான் இந்த RECOVERY software.

recuva-file-recovery-software
Recuva-file-recovery-software

இழந்த கோப்புகளை (files) மீட்டுக் கொண்டு வர பயன்படும் மென்பொருள்களில் சிறந்த ஒன்று REUVA software.இது முற்றிலும் இலவச மென்பொருள் ஆகும்.priform Ltd-நிறுவனத்தால் நமக்கு இலவசமாக வழங்கபடுகிறது.இதன் மூலம் நாம் அழித்த கோப்புகள் மட்டுமல்லாமல் ஃபார்மட்(Format) செய்த pendrive மற்றும் hard disk லிருந்தும் கோப்புகளை மீட்டு எடுக்கலாம். இந்தமென்பொருளை தரவிறக்க கீழிருக்கும் சுட்டியை அழுத்துங்கள். 

No comments:

Post a Comment