Tuesday 7 August 2018

உடம்பு வலி சும்மா பின்னி எடுக்குதா? நீங்க ஏன் இத ட்ரை பண்ணக்கூடாது?

உடல் வலி உண்டாவதற்கான சில பொதுவான அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

மனஅழுத்தம் 

நீர்சத்து குறைபாடு 

போதுமான அளவு தூக்கமின்மை 

நிமோனியா 

கீல்வாதம் 

நாள்பட்ட சோர்வு நோய்க்குறி 

நுண்ணுயிர் தொற்றால் உண்டாகக்கூடிய காய்ச்சல் மற்றும் சளி இரத்த அழுத்த சிகிச்சைக்காக பயன்படுத்தும் சில வகை மருந்துகள் உடலில் நீர் தங்குதல் - உங்கள் உடலில் அதிகமான அளவு நீர் சேர்வதால், தசைகள் வீக்கமுற்று, நரம்புகளுக்கு ஒரு வித அழுத்தம் உண்டாகிறது. இதனால் உடல் வலி உண்டாகிறது. ஹைபோகலிமியா என்னும் இரத்த பொட்டசிய குறை போன்ற பிரச்னைகள் உண்டாக வாய்ப்புண்டு. 

உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்கள் மூலமாகவே எளிதான முறையில் இந்த உடல் வலிகளைப் போக்க முடியும். உங்கள் உடலில் உண்டாகும் வலியை உடனடியாகப் போக்க பயன்படும் சில தீர்வுகள் இதோ உங்களுக்காக.. 

உடல் வலியைப் போக்க சில இயற்கை வழிகள் கீழே 14 வகையான தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றைப் பயன்படுத்தி உங்கள் உடல் வலியை எளிதில் குறைக்கலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர் 
ஆப்பிள் சிடர் வினிகர் 

தேவையான பொருட்கள்: 

ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் 

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் 

தேன்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த நீரில் சிறிதளவு தேன் சேர்த்து பருகவும் 

நீங்கள் குளிக்கும் பாத் டப்பில் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து சிறிது நேரம் அந்த நீரில் மூழ்கி இருந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். 

தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை இதனை செய்யலாம். ஆப்பிள் சிடர் வினிகருக்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் நுன்னுயிர் எதிர்ப்பு தன்மைகள் உண்டு. இதனால் வலி மற்றும் வீக்கம் குறைகிறது.

ஐஸ்
ஒரு ஐஸ் பேக் உடல் வலி உள்ள இடங்களில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். 

ஒரு 10 நிமிடம் அப்படியே விட வேண்டும். பின்பு இதே முறையை இரண்டு அல்லது மூன்று தடவை பின்பற்றலாம். இந்த தீர்வை நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை பின்பற்றலாம். 

ஐஸ் ஒத்தடம் கொடுப்பதால், வலி பாதிக்கப்பட்ட இடத்தில் தற்காலிகமாக நரம்பு செயல்பாடு குறைகிறது. 

இதனால் வலியும் குறைகிறது. இந்த தீர்வு, உடல் வலியிலிருந்து தற்காலிக ஆனால் விரைவான தீர்வை அளிக்கிறது,

இஞ்சி 



1-2 இன்ச் நறுக்கிய இஞ்சி 

ஒரு கப் தண்ணீர் 

தேன் சிறிதளவு 

இஞ்சியைத் துருவி ஒரு கப் தண்ணீரில் சேர்க்கவும். இந்த நீரை பாத்திரத்தில் விட்டு நன்றாக கொதிக்க விடவும். ஐந்து நிமிடம் கழித்து இறக்கி வடிகட்டவும். இந்த வடிகட்டிய நீரில் சிறிதளவு தேன் சேர்த்து பருகவும். 

சூடாக இருக்கும்போதே இதனைப் பருகுவது நல்லது. ஒரு நாளைக்கு மூன்று முறை இந்த இஞ்சி தேநீரை பருகலாம். 


இஞ்சியில் தாவர வேதியல் தன்மை அதிகமாக உள்ளது. இதனால் சுகாதார ஊக்குவிப்பு நன்மைகளை அதிகமாக தருகிறது. 

இஞ்சி, அழற்சி எதிர்ப்பு தன்மையும், வலி நிவாரணத் தன்மையும் அதிகம் பெற்றுள்ளதால், அடிக்கடி உடலில் உண்டாகும் வலியைப் போக்க சிறந்த முறையில் உதவுகிறது.

மஞ்சள் 



ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் 

ஒரு கிளாஸ் சூடான பால் 

ஒரு கிளாஸ் சூடான பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 

பால் சிறிது ஆறியவுடன் அதில் சிறிதளவு தேன் சேர்க்கவும். இந்த கலவையை உடனடியாக பருகவும். 

இரவு உறங்கச் செல்வதற்கு முன் ஒரு முறை தினமும் இதனை பருகலாம். உடல் வலியைப் போக்குவதில் சிறந்த பலன் அளிப்பது இந்த மஞ்சள். 

அழற்சி எதிர்ப்பு, வலி நிவாரணி, மற்றும் குணப்படுத்தும் தன்மை போன்றவற்றைக் கொண்டிருப்பதால், உடல் வலியை எதிர்த்து போராடி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு தன்மையையும் அதிகரிக்கிறது.

கறுவா பட்டை 

ஒரு ஸ்பூன் கறுவா பட்டை தூள் 

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் 

தேன் 

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீருடன் ஒரு ஸ்பூன் கறுவா பட்டை தூளை சேர்க்கவும். இந்த கலவையை நன்றாகக் கலந்து, அதில் சிறிதளவு தேன் சேர்க்கவும். தேனை கலந்தவுடன் இதனைப் பருகவும். 

இந்த கலவையை நீங்கள் தினமும் ஒரு முறை பருக வேண்டும். பல்வேறு உணவுகளில் நறுமனத்திற்காக சேர்க்கப்படும் ஒரு மசாலாப் பொருள் கறுவா பட்டை. இந்த கறுவா பட்டையில் சக்தி மிக்க அழற்சி எதிர்ப்பு, வலி நிவாரணி, மற்றும் குணப்படுத்தும் தன்மைகள் உள்ளன. இதனால் இதனை உடல் வலிக்கான தீர்வுகளில் பயன்படுத்தி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தினை அதிகரிக்கலாம். 

சிவப்பு மிளகாய் 



ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் 

ஒரு கப் வெதுவெதுப்பான நீர 

தேன் 

சிறிதளவு ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்க்கவும். நன்றாகக் கலந்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்க்கவும். பிறகு இந்த கலவையைப் பருகவும். 

தினமும் இந்த கலவையை ஒன்று அல்லது இரண்டு முறை பருகலாம். வலியுணர்வைத் தடுக்கும் தன்மை, மிளகாயில் உள்ள காப்சிசின் என்ற கூறுக்கு உண்டு. இது இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து வலியுடன் போராடுகிறது. 

இது இயற்கையாகவே வலியைக் குறைக்க உதவுகிறது.

வைட்டமின் 



உடல் இயல்பாக இயங்குவதற்கு பல்வேறு வைட்டமின்கள் தேவைப்படுகிறது. 

வைட்டமின் பி1, டி, ஈ ஆகியவற்றின் குறைபாடு, நரம்பு மற்றும் தசைகளில் சேதத்தை உண்டாக்கலாம். 

இதன் விளைவாக, தசை பலவீனம் மற்றும் வலி உண்டாகலாம். அதனால், வைட்டமின் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை தினசரி எடுத்துக் கொள்வதால், உடல் வலி தவிர்க்கப்படும். 

மேலும் மருத்துவரின் பரிந்துரைப்படி வைடமின் மாத்திரைகளும் எடுத்துக் கொள்ளலாம்.


Saturday 25 February 2017

பேஸ்புக்கில் “search” பட்டனில் தேடிய நண்பர்களை, நீக்குவது எவ்வாறு?

இன்று பேஸ்புக்  கணக்கினை பயன்படுத்தாதவர்களைக் காண்பதே அரிது. பெரும்பாலும் அனைவரிடமும் பேஸ்புக் கணக்குகள் இருக்கின்றன. அந்த வகையில்  சிலர் எப்போதும் பயன்படுத்தவில்லை என்றாலும் கூட பேருக்கென்று ஒரு கணக்கினை வைத்திருப்பர். 

அதனை  எப்போதாவது  ஓரிரு முறையாவது  உபயோகப்படுத்துபவரும் உள்ளனர். ஏதோ ஒரு வகையில் அனைவரும் பேஸ்புக்கை அணுகிக் கொண்டிருக்கின்றனர்.

அப்படியிருக்கையில் பேஸ்புக் கணக்கில் அடிக்கடி சேர்ச் பட்டனில் நாம் பலரை தேடி அவர்கள் சம்மந்தப்பட்ட விவரங்களை  பார்த்திருப்போம். அவையனைத்தும் அடுத்த முறை தேடும்போதும் சேர்ச் பாக்சில் வந்து நிற்கும்.


சேர்ச் பாக்சில் நாம் தேடியவர்கள்  பெரும்பாலும் நாம் விரும்பாத அல்லது நம்மை விரும்பாத மேலும் நமக்கு கசப்பான அனுபவத்தை தரும் நபர்களாக இருக்க கூடும்.   பேஸ்புக்கில்  ஆட்டோ ஸ்டோரேஜ் அம்சம் இருப்பதனால் இதுபோன்ற தேடல்களை தானாகவே சேமித்து வைத்து கொள்கின்றன. இதனை தடுக்க இதோ நான்கு  வழிமுறைகள்  கொடுக்கப்பட்டுள்ளன.

படி 1: உங்கள் பேஸ்புக்  கணக்கில்  cover photo வின் அருகே காணப்படும்    ‘Activity Log’ அல்லது  ‘View Activity Log’ ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

படி 2: அப்பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே போஸ்ட் செய்த புகைப்படங்கள், கமெண்ட்டுகள்,போன்றவற்றுடன்   திரையில் தோன்றும் “more ”  ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அதில் காணப்படும்  ஆப்ஷன்களில்  கீழ்     காணப்படும் “Search ” பட்டனை கிளிக் செய்யவும்.

படி 3:  அங்கே  நீங்கள் தேடிய அனைத்து பெயர்களும்  மாதம் மற்றும் தேதியுடன் இருப்பதைக் காணலாம்.

படி 4:  பின்னர்  திரையில்  வலது ஓர மூலையில் தெரியும் “clear search” ஆப்ஷனை தேர்ந்தெடுத்து இதற்கு முந்தைய அனைத்து தேடல்களையும் நீக்கலாம்.