Sunday, 26 February 2012

ஹார்ட் டிஸ்கில் இருக்கும் தரவை முழுவதுமாக அழிப்பது எப்படி

ஹார்ட் டிஸ்க் இல் இருந்து (Recycle bin) நாம் Delete செய்யும் தரவுகள்  நிரந்தரமாக ஹார்ட் டிஸ்கில் இருந்து அழிக்கப்படுகின்றனவா? நிச்சயமாக இல்லை. இவை ஏனைய தரவுகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாத வண்ணம் ஹார்ட் டிஸ்கில் உள்ள இடைவெளியில்  Re-writable முறையில் சேமிக்கப்படுகின்றன. அதாவது நீங்கள் புதிய தரவுகளை சேமிக்கும்போது ஹார்ட் டிஸ்கில் இடம் போதவில்லை என்றால் இவற்றை அழித்துவிட்டு அதில் சேமித்துக்கொள்ளும். 

சரி.. அப்படியானால் தரவுகளை எப்படி நிரந்தரமாக அழிப்பது? அதற்கு Eraser என்னும் மென்பொருள் உதவி செய்கிறது.

இம் மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவியதும் மென்பொருளை திறந்து மேல் பக்கத்தில் உள்ள Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.

கிளிக் செய்து வரும் விண்டோவில் Erase Settings என்பதன் கீழுள்ள Drop Down menu வை கிளிக் செய்யுங்கள். அதில் Erase செய்யும் முறைகள் காட்டப்படும். உங்களுக்கு விரும்பிய முறையை தெரிவு செய்துகொள்ளலாம்.

அதேபோல் Erase Schedule என்பதன் மூலம் Schedule பண்ணி அழித்துக்கொள்ளலாம்.

இதேவேளை முழு ஹார்ட் டிஸ்கையும் Delete செய்யாமல், நீங்கள் விரும்பிய Drive / Folder ஐ Delete செய்யும் வசதியும் இதில் உள்ளது.

இந்த மென்பொருளை தரவிறக்கhttp:eraser

No comments:

Post a Comment