இணையத்தள உலகத்தையே இன்று ஆட்டிவைக்கும் ஜாம்பவான் கூகுள் தேடுபொறியாகும். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை பின் தள்ளி வின்டேசுக்கு நிகராக ஒரு ஆப்பரேஷன் சிஸ்டத்தையும் இவர்கள் வடிவமைத்துவருகிறார்கள். தற்போதைய நிலையில் பில் கேட்ஸ் கூட இவர்களைப் பார்த்து கிலிகொள்கிறார். கூகுள் தேடுபொறியாளர்கள் தற்போது தயாரித்துள்ள மென்பொருள்(software), காரை சாரதி இல்லாமல் ஓட்டும் வல்லமை உடையது. காரில் காணப்படும் கமராக்கள், மற்றும் தூரம் அறியும் புற ஊதாக் கதிர்களைக் கொண்ட நுன் தொழில்நுற்ப்பத்தோடு இந்தக கார் இயங்குகிறது. இதற்கு முன்னர் மேசயிடிஸ் பென்ஸ் போன்ற முன்னணி கார் தயாரிப்பாளர்கள் சாரதி இல்லாமல் ஓடக்கூடிய கார்களை வடிவமைத்தபோதும், மென்பொருள் திறன் குறைவு காரணமாக அது பெருவெற்றியை பெறவில்லை.
ஆனால் தற்போது கூகுள் மென்பொறியியலாளர்கள் இதனை நேர்த்தியாக வடிவமைத்து காரில் பொருத்தியுள்ளனர். அமெரிக்காவில் தற்போது வெள்ளோட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்தக் கார் பல ஆயிரம் கிலோ மீட்டர்களை வெள்ளோட்டமாக ஓடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுவரை மிக நேர்த்தியாக அது ஓடுவதாகவும், சிறு பிழைகள் கூட வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டு ஒன்றிற்கு சுமார் 12 மில்லியன் சாலை விபத்துகள் நடப்பதாகவும், இவ்வாறு கம்பியூட்டர் மென்பொருள் மூலம் ஓடும் கார்கள் மூலம் இவ்விபத்துகள் பாதியாகக் குறையும் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment