உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 30-வது “லீக்” ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் “ஏ” பிரிவில் உள்ள நியூசிலாந்து-கனடா அணிகள் மோதின.
கனடா “டாஸ்” வென்று நியூசிலாந்தை முதலில் ஆட அழைத்தது நியூசிலாந்து அணியில் வெட்டோரி ஆடாததால் டெய்லர் கேப்டனாக பணியாற்றினார்.
தொடக்க வீரர்களாக குப்திலும், மேக்குல்லமும் ஆடினார்கள். 17 ரன் எடுத்திருந்த போது குப்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டைரர் 38 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் இருந்த மேக்குல்லம் கனடா அணியின் பந்து வீச்சை விளாசி தள்ளினார். அவர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
அவர் 107 பந்தில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் 100 ரன் எடுத்தார். அவருக்கு இது 3-வது சதம் ஆகும். அவர் 101 ரன் எடுத்த போது ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் டெய்லர், நாதன் மேக்குல்லம் ஜோடி விளையாடி ரன் சேர்த்தது. குறிப்பாக டெய்லர் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார்.
40 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது நியூசிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்து இருந்தது. நிதானமா விளையாடி வந்த நாதன் மேக்குல்லம் 10 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வில்லியம்சன் அதிரடியாக விளையாடினார்.மறு முனையில் சிறப்பாக விளையாடி வந்த டெய்லர் 74 ரன் இருக்கும் பாலாஜி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
பின்னர் களம் வந்த ஸ்டைரிஸ் பந்துகளை நாளாபுறமும் விளாசி ரன் குவித்தார். அவர் 35 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்தாக வந்த பிராங்ளின் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்தார் இருவரும் கனடா பந்து வீச்சை அடித்து விளையாடி ரன் குவித்தனர்.
இறுதியா நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழந்து 358 ரன்கள் குவித்தது.
பின்னர் 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 261 ரன் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி கனடா அணியை 97 ரன் வித்தியாசத்தில் ரன் வித்தியாசத்தில் வென்றது
No comments:
Post a Comment