Saturday, 25 June 2011

தற்போது நீங்கள் Delete செய்த ஜிமைல் முகவரிகளை மீழப் பெறலாம்


ஜி-மைல் பாவனையாளர்களை அடிக்கடி கூகிள் சந்தோசப்படுத்திவருவதை நாம் அறிவோம். அந்த வரிசையில் தற்போதும் ஒரு சிறிய முக்கியமான வசதியினை ஜி-மெயில் தந்துள்ளது. தற்போது நீங்கள் Delete செய்த மின்னஞ்ஞல் முகவரிகளை மீழப்பெறக்கூடியதாக கூகிள் ஒரு புதிய வசதியினை ஏற்படுத்தித் தந்துள்ளது.

இந்த புதிய வசதியினைக் கொண்டு , நீங்கள் 30 நாட்களுக்குள் Delete செய்த மின்னஞ்ஞல் முகவரியினை பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு உங்கள் மின்னஞ்ஞல் முகவரிகளை மீழப் பெற வேண்டுமாயின் ஜி-மைலில் காணப்படும் ‘contacts’ பிரிவிற்குள் சென்று ‘More actions’ பகுதியினை க்ளிக் செய்து அங்கு காணப்படும் “Restore contacts” என்பதனை தெரிவு செய்வதன் மூலம் உங்கள் அழிந்த மின்னஞ்ஞல்களை மீழப் பெற்றுக்கொள்ள முடியும்.
restore contacts
தவறுதலாக நீங்கள் ஏதேனும் முகவரிகளை அழித்திருந்தால் கவலைப்பட வேண்டாம். இந்த Restore முறையின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment