Saturday, 25 June 2011

விண்டோஸ் போன் தயாரிப்பு: மைக்ரோசாப்ட், நோக்கியா கூட்டு!


கூகுள் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் நிறுவன ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுடன் போட்டியிடும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் நோக்கியா கூட்டு சேர்ந்துள்ளது.இன்டர்நெட் பிரவுசிங், சமூக இணைய தள தொடர்பு உட்பட பல்வேறு அதிநவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.

தகவல் தொடர்புக்கு மட்டுமே செல்போன் என்ற நிலை மாறி, பல வசதிகளுக்கு பயன்படுவதால் அடிப்படை வசதி கொண்ட செல்போன்கள் விற்பனை குறைந்து விட்டது. ஸ்மார்ட் போன்கள் விலை குறைந்து வருவதால் அதன் விற்பனை உயர்ந்துள்ளது. அதை பயன்படுத்தி கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டம் அறிமுகம் செய்தது. பெரும்பாலான போன் நிறுவனங்கள் அதை உரிமம் பெற்று செல்போன் தயாரித்து விற்கின்றன. ஆப்பிள் நிறுவன ஐபோனுக்கும் வரவேற்பு உள்ளது.

எனவே, இந்த போட்டியை சமாளிக்க முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்டுடன் இணைந்து விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் செல்போன்களை தயாரிக்க நோக்கியா முடிவு செய்துள்ளது. பின்லாந்தை சேர்ந்த உலகின் மிகப் பெரிய செல்போன் நிறுவனமா நோக்கியா, சமீப காலமாக கடும் போட்டியால் சந்தையில் தனது பங்கை இழந்து வருகிறது.

நோக்கியாவின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஸ்டீபன் எலோப் பொறுப்பேற்றுள்ள நிலையில், மைக்ரோசாப்டுடன் அது கூட்டு சேர்வது, நிறுவனத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சமீபத்தில்தான் செல்போன் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் கூகுளின் ஆண்ட்ராய்டு உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment