Saturday, 25 June 2011

கூகிளிடமிருந்து வழங்கும் புதியதோர் வரப்பிரசாதம்



தேடலில் முன்னோடியாகவிருக்கும் கூகிளானது தற்போது தமிழ் பேசுவோருக்காக நல்லதொரு சேவையினை வழங்க ஆரம்பித்துள்ளது. தமிழர்களுக்கு மட்டுமல்ல ஆங்கில மொழி பேசுவோரும் தமிழ் மொழியில் உள்ள தகவல்களை ஆங்கிலத்தில் மொழி மாற்றி பார்க்கக் கூடிய வசதியை தந்துள்ளது.

இதன் மூலம் ஆங்கிலத்தில் கொடுக்கப்படும் வசனங்களை தமிழிலும்; தமிழ் மொழியில் கொடுக்கப்படும் வசனங்களை ஆங்கிலத்திலும் மொழி மாற்றி வாசித்துக் கொள்ளலாம். [ சில சொற்கள் மட்டும் நேரடியான மொழி பெயர்ப்பிற்கு உட்பட்டுள்ளது. நாளடைவில் மாற்றம் வருமென எதிர்பார்க்கலாம்]

கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி கூகிளின் மொழிபெயர்ப்புத் தளத்துக்குச் சென்று உங்களுக்கு வேண்டியவாறு மொழியை மாற்றி பயனடைந்து கொள்ளுங்கள்.
வலைப்பக்கங்களை முழுமையாக மொழிபெயர்ப்புச் செய்து பார்க்க கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு இடைவெளியில் இணைய முகவரியை கொடுத்து மாற்றவேண்டிய மொழியைத் தெரிவுசெய்தபின்னர் Enter செய்தால் போதும்.....


No comments:

Post a Comment