கடந்த ஆண்டு மார்ச் மாதம் சாமியார் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் சில தனியார் டெலி விஷன்களில் ஒளிபரப்பானது. இந்த வீடியோ காட்சிகளில் இருப்பது தாங்கள் அல்ல கிராபிக்ஸ் முறையில் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் மறுப்பு தெரிவித்தனர்.
மேலும் நடிகை ரஞ்சிதா கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சில தனியார் டி.வி.க் களில் நித்யானந்தாவுடன் நான் படுக்கை அறையில் இருப்பது போன்ற காட்சிகளை ஒளிபரப்பினர். அந்த வீடியோ காட்சிகள் கிராபிக்ஸ் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் என் பெயரை களங்கப்படுத்த சிலர் திட்டமிட்டு சதி செய்துள்ளனர்.
இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்காவில் உள்ள சில டெலிவிஷன்களிலும் ஒளிபரப்பானது. இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த காட்சிகளை இனிமேல் எந்த மீடியாவும் வெளியிடக்கூடாது என தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் ரஞ்சிதா கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.எச். பட்டேல் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா- ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை டெலிவிஷன்களில் ஒளிபரப்ப நீதிபதி இடைக்கால தடை விதித்தார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.ஆனாலும்! இதையும் அறிந்து கொள்ளுங்கள் !
நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் இருப்பது போன்று வெளியான வீடியோ படகாட்சிகளால் பரபரப்பாக பேசப்பட்டவர் நித்யானந்தா. அவரது கதையை தெலுங்கில் படமாக எடுக்கின்றனர். நித்யானந்தா வேடத்தில் ராஜேந்திரபிரசாத் நடிக்கிறார். இவர் தெலுங்கு திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக உள்ளார்.
முக்கிய கேரக்டரில் சிவாஜி, சாய்குமார் நடிக்கின்றனர். நித்யானந்தா கதை இப்படத்தில் துணை கதைபோல் உருவாக்கப்பட்டு உள்ளதாம். இந்த படத்தின் பூஜை இரு தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் நடந்தது. அவ்விழாவுக்கு ராஜேந்திர பிரசாத் நித்யானந்தா கெட்டப்பில் வந்தாராம்.
நித்யானந்தாவின் முழு வாழ்க்கையும் படமாக்கப்படுகிறதா? அல்லது ரஞ்சிதா சம்பந்தப்பட்ட பகுதி மட்டும் படமாக்கப்படுகிறதா? என்று கேட்டபோது படக்குழுவினர் பதில் சொல்ல மறுத்துவிட்டனர். ரஞ்சிதா கேரக்டரில் நடிக்கும் நடிகையை தேர்வு செய்து வருகிறார்களாம்.
No comments:
Post a Comment