Sunday, 13 March 2011

தமது பேட்ஸ்மேன்கள் மீது டோனி பாய்ச்சல்

இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

பேட்ஸ்மேன்கள் ரசிகர்களின் உற்சாகத்துக்காக ஆடுவதை விட நாட்டுக்காக ஆடுவதுதான் முக்கியம் என்பதை உணர்ந்து இருக்க வேண்டும். நீங்கள் பந்தை அடித்து ஆட நினைக்கும் போது நாட்டுக்காக ஆடுகிறோம் என்று நினைக்க வேண்டும். ரசிகர்களுக்காக இருக்க கூடாது. பேட்டிங் பவர்பிளே என்றால் பவுண்டரி, சிக்சர் அடிப்பது இல்லை. இதை பேட்ஸ்மேன்கள் புரிந்து கொள்ள வேண்டும். சூழ் நிலைக்கு தகுந்தவாறு விளையாட வேண்டும். இயல்பாக 50 ஓவர் வரை ஆடி இருந்தால் 325 முதல் 330 ரன்கள் எடுத்து இருந்து இருப்போம்.

பேட்டிங் வரிசையை மாற்றி பார்த்தேன். அதற்கு பலன் அளிக்கவில்லை. யூசுப்பதானை 4-வது வீரராக களம் இறக்கினேன். அவர் உடனடியாக அவுட் ஆவார். 2 அல்லது 3 ஓவர் நின்றால் மட்டுமே அவரால் நிலைத்து அதிரடியாக ஆட முடியும்.

வெற்றி குறித்து தென்ஆப் பிரிக்க கேப்டன் சுமித் கூறியதாவது:- இது எங்களுக்கு மிகப் பெரிய வெற்றி. ஏனென்றால் சென்னையில் நாங்கள் இங்கிலாந்திடம் தோற்று இருந்தோம். கூட்டு முயற்சியால் வெற்றி கிடைத்தது. பீட்டர்சன் பந்தை அடித்து ஆடுவார் என்று எதிர்பார்க்க வில்லை. ஸ்டெய்ன் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் தான் இந்தியாவை 300 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினார்.

No comments:

Post a Comment